உலகம்
Typography

 

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை காலை நடத்தப் பட்ட 26 பேரைப் பலி கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் உலகை உலுக்கியுள்ள அமெரிக்காவின் ஆயுதக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் அடுத்த மோசமான வன்முறையாகப் பதிவாகியுள்ளது.

நேற்றுக் காலை சௌதர்லேண்ட் ஸ்பிரிங்க்ஸ் பகுதியில் அமைந்துள்ள பாப்டிஸ்ட் தேவாலயத்தில் பிரார்த்தனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது காரில் வந்த மர்ம நபர் திடீரென மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் தான் 2 குழந்தைகள் உட்பட 26 பேர் பலியாகி உள்ளனர். இந்த வன்முறையினை மேற்கொண்ட மர்ம நபர் பின்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவத்தில் காயம் அடைந்த பொது மக்களில் பலர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் குறித்த மர்ம நபர் அமெரிக்க விமானப் படையைச் சேர்ந்தவர் எனத் தற்போது தெரிய வந்துள்ளது.

26 வயது கொண்ட டேவின் பேட்ரிக் என்ற அந்நபர் ஏற்கனவே துர்நடத்தை காரணமாகப் பணி நீக்கம் செய்யப் பட்டவர் ஆவார். இவர் தன் மனைவியையும் குழந்தையையும் கொடுமைப் படுத்திய காரணத்துக்காக 1 வருட சிறைத் தண்டனையையும் அனுபவித்திருந்தார். தற்போது இந்தக் கொடூர சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாதம் உள்ளதா என்ற கோணத்திலும் கடும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்