உலகம்
Typography

தன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப் பட்டதை அடுத்து பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் மைக்கேல் ஃபாலன் நேற்று வியாழக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே இற்கு இவர் கடிதம் வரைந்துள்ளார். அதில் தனது ஒழுக்க நிலை தவறியதை ஒப்புக் கொண்டும் உள்ளார். இக்கடிதத்தில் மேலும் இவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது. 

அதாவது, 'சமீப காலமாக பிரிட்டனில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பலவிதமான குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப் பட்டு வருகின்றன. இவற்றில் எனது முந்தைய நடவடிக்கைகள் குறித்து எழுப்பப் பட்டிருந்த அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள். ஆனால் கடந்த சில நாட்களாக சில சந்தர்ப்பங்களில் என்னால் ஒழுக்கத்தை சரிவரப் பேண முடியவில்லை. எனது நடத்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறேன். பிரிட்டனின் ஓர் உயரிய பதவியான பாதுகாப்புப் படையின் பிரதிநிதியாக அதன் கௌரவத்தைப் பாதுகாக்கத் தவறி விட்டேன். எனவே நான் எனது அமைச்சர் பதவியில் இருந்து விலகுகின்றேன்.'

மைக்கேல் ஃபாலனின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக அறிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் தெரேசா மே பாதுகாப்புத் துறையின் புதிய அமைச்சராக கேவின் வில்லியம்சன் என்பவரை அறிவித்துள்ளார். தான் பதவி ஏற்றதில் இருந்தே பிரிட்டன் பிரதமர் தெரேசா மே நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் எனவும் நெறி தவறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் எச்சரித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்