Wednesday, May 22nd

Last update10:22:12 PM

லெபனானில் கலவரம் : 6பேர் பலி

நேற்று லெபனான் பெய்ரூட்டில் நடந்த கலவரத்தில் 6 பேர் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பெய்ரூட் கார் குண்டு வெடிப்பில் பலியான இராணுவ தலைமை அதிகாரியின் இறுதிச் சடங்கில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்த எதிரணியினர் அழைப்பு விட்டுத்திருந்தனர். இதையடுத்து நேற்று பெய்ரூட்டில் நடந்த பேரணியில் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்களுக்கும் இராணுவத்தினருக்கும், இடையே கடுமையான மோதல் ஏற்பட்டதால் அங்கிருந்த வாகனங்கள் பல சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும்  இராணுவத்தினர் கலவரத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியெறிந்தனர். எனினும் கலவரம் பெரிதாக வெடித்ததால் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தி கலவரத்தை தடுக்க முயற்றனர். இதில் 6பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஞாயிறு முதல் அங்கு ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருவதால் அங்கு பதற்றம் நிலவுவதாகவும் அறியப்படுகிறது.

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus