உலகம்
Typography

ஞாயிற்றுக்கிழமை ஸ்பெயினின் கேத்தலோனியா மாநிலத் தலைநகரான பார்சிலோனா நகரில் கேத்தலோனியா விடுதலையை அங்கீகரிக்க வேண்டாம் என்ற கோரிக்கையின் கீழ் பத்தாயிரக் கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தியிருந்தனர்.

இதைத் தொடர்ந்து கேத்தலோனியா பிரிவினைத் தலைவர் கார்லெஸ் புயிடெமொண்ட் தனது சுதந்திரக் கோரிக்கையைக் கைவிட வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப் பட்டுள்ளார். கேத்தலோனியா பாராளுமன்றத்தில் ஆக்டோபர் 1 ஆம் திகதி முன்னெடுக்கப் பட்ட சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பை ஸ்பெயின் அரசு தடை செய்திருந்தது. இந்நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை

மறுபடியும் கேத்தலோனிய விடுதலைக்காக பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப் படக் கூடுமோ என ஸ்பெயின் அஞ்சுகின்றது.

இந்த வாக்கெடுப்பு நடத்தப் பட்டால் கேத்தலோனிய வாக்களிப்பு சட்டத்தின் படி 6 மாதத்துக்கு ஸ்பெயின் அரசுடனான பிரிவினைப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப் பட்டு பின்னர் முற்றிலும் தனித்த அரசாக மாறத் தேவையான பிராந்தியத் தேர்தல்கள் நடத்தப் படவும் வழி உள்ளது.

இந்நிலையில் பிளவு படுதலை விரும்பாத ஸ்பெயின் அரசு தானாகவே சுதந்திரப் பிரகடனத்தை கேத்தலோனியா மேற்கொள்ளாதவாறு இருக்க அரசியல் இராஜதந்திர ரீதியாகச் செயற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்