உலகம்
Typography

விண்ணில் பூமியைச் சுற்றி வரும் மிகப்பெரிய ஆய்வு கூடமான ISS எனப்படும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் என்ற செய்மதியில் தொடர்ந்து 288 நாட்கள் தங்கிப் பணியாற்றிய 57 வயதாகும் அமெரிக்க விண்வெளி வீராங்கணை சனிக்கிழமை பூமிக்கு திரும்பியுள்ளார்.

இவர் விண்ணில் தங்கி ஆய்வு செய்த மொத்த நாட்கள் 665 ஆகும். இதன் மூலம் அவர் விண்வெளியில் நீண்ட காலம் தங்கி ஆய்வு செய்த பெண்மணி என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். ரஷ்ய விண்வெளி ஆய்வு நிலையமான றொஸ்கொஸ்மொஸ்ஸின் ஏவுதளம் அமைந்துள்ள கஸகஸ்தான் நாட்டில் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம் வந்து இவர் தரையிறங்கினார்.

Expedition 51 எனப்படும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான ISS இன் பிரதான செயற்திட்டத்தை 2007 ஆம் ஆண்டு முதல் தலைமை தாங்கிய பெக்கி விட்சன் தான் விடைபெற முன்னர் இப்பொறுப்பை 2017 ஜூன் மாதம் ஃப்யொடொர் யுர்ச்சிக்கின் என்ற வீரரிடம் கையளித்து இருந்தார்.  பல்கலைக் கழக கல்விக்குப் பின் ஒரு உயிர் வேதியியலாளராக (Bio chemist) பட்டம் பெற்ற இவர் நாசாவின் முதல் பெண் விண்வெளி வீரர்கள் அலுவலக தலைமை வீரராகவும் ஒரு பைலட் அல்லாத முதல் விண்வெளி தலைமை வீரருமாக பெருமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்