உலகம்
Typography

பிரிட்டன் அரச குடும்பத்துக்கு 3 ஆவது புதிய வாரிசு வருகை தரவுள்ளது. அதாவது பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் தற்போது 3 ஆவது முறையாகக் கர்ப்பம் தரித்திருப்பதாக பிரிட்டன் ஊடகங்கள் உத்தியோகபூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளன.

2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் கேட் மிடில்டன் தம்பதிக்கு 2013 ஜூலையில் முதல் குழந்தையும் முடிக்குரிய வாரிசுமான ஜோர்ஜ் பிறந்தார். 2015 இல் இத்தம்பதிக்கு சார்லொட் என்ற பெண்குழந்தை பிறந்தது. குட்டி இளவரசர் ஜோர்ஜுக்கு 4 வயதும் சார்லொட்டுக்கு 2 வயதும் ஆகும் நிலையில் 3 ஆவது முறை கேட் கர்ப்பம் தரித்திருப்பதை கென்சிங்டன் அரண்மனை உறுதிப் படுத்தியுள்ளது.

தற்போது பிறக்கவுள்ள 3 ஆவது குழந்தை பிரிட்டனின் முடிக்குரிய வரிசையில் 5 ஆவது இடத்தைப் பெறவுள்ளது. பிரிட்டனின் குட்டி இளவரசர் இப்போது பள்ளி சென்று வருகின்றார். இதேவேளை பிரிட்டன் வரலாற்றில் மிக நீண்ட காலமாக ஆட்சி செய்து வரும் எலிசபெத் 2 மகாராணியாருக்கு 4 குழந்தைகள், 8 பேரக் குழந்தைகள் மற்றும் 5 கொள்ளுப் பேரக் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்