உலகம்
Typography

செவ்வாய் இரவு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைத் தாக்கிய 7 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கத்தின் விளைவுகள் குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதுவரை 25 பேர் இதில் பலியாகி உள்ளனர்.

250 இற்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்ததுடன் இதில் 40 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். சிச்சுவான் மாகாணத்தில் தொடர்ச்சியாக அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் பல ஆயிரக் கணக்கான பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பூங்காக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் வழங்கப் பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தில் சிக்கிய சுமார் 9000 உள்ளூர் வாசிகள் மீட்கப் பட்டுள்ளதாகவும் 126 வெளிநாட்டவர் உட்பட 50 000 சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப் பட்டு பாதுகாப்பாக மியான்யாங் மற்றும் செங்டு போன்ற நகரங்களுக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. நிலநடுக்கம் தாக்கிய ஜிஷைகௌ என்ற பகுதி யுனெஸ்கோவால் பராமரிக்கப் பட்டு வரும் பிரபல சுற்றுலாத் தலம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இப்பகுதியில் உள்ள 17 பிரதான நகரங்களுக்கு மின்சாரம் மீளவும் வழங்கப் படுவதாகவும் விமான நிலையத்துக்குச் செல்லக் கூடிய முக்கிய நெடுஞ்சாலைகள் போக்குவரத்துக்காகத் திறக்கப் பட்டுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

Most Read