உலகம்
Typography

இன்று ஆகஸ்ட் 2 ஆம் திகதி புதன் கிழமை பூமி மிகை உபயோகத் தினமாகும். (Earth Overshoot Day) அதாவது ஒவ்வொரு வருடமும் பூமியில் உள்ள வளங்களை அந்த வருடத்துக்கு உபயோகிக்கக் கூடிய அளவுக்கு மேல் அதிகமாக உபயோகிக்கும் போது அந்த மிகை உபயோகம் தாண்டும் தினம் ஒவ்வொரு வருடமும் பூமி மிகை உபயோகத் தினமாக அனுட்டிக்கப் படுகின்றது.

இது குறித்த சில முக்கிய தகவல்களைப் பார்ப்போம். 1997 இல் முதன் முதலாக இத்தினம் செப்டம்பர் இறுதியில் அனுட்டிக்கப் பட்டது. ஒவ்வொரு வருடமும் இத்தினம் முன்னுக்குத் தள்ளப் பட்டு இவ்வருடம் ஆகஸ்ட் 2 இல் நிற்கின்றது. இன்றைய திகதிப்படி மனிதனின் தேவைக்கு 1.7 மடங்கு பூமி தேவைப் படுகின்றதாம். இதுவே 2030 இல் எமக்கு 2 பூமிகள் தேவைப் படுமாம். குளோபல் ஃபுட்பிரிண்ட் நெட்வேர்க் என்ற அமைப்பின் தகவல் படி பூமியில் உள்ள அனைத்து மக்களும் இந்தியர்களாக வாழ்ந்தால் 0.6 மடங்கு பூமி போதும் என்றும் அனைவரும் அமெரிக்கர்களாக வாழ வேண்டுமென்றால் 5 மடங்கு பூமி தேவைப்படும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது.

எமது பூமியில் மனிதனின் தேவை மிக அதிகரித்துள்ளதால் 1970 இலிருந்து 2012 இற்குள் 58% வீதமான ஏனைய உயிரினங்களின் சனத்தொகை வீழ்ச்சியடைந்துள்ளதாம். வருங்காலத்தில் இந்தியாவில் நிலத்தடி நீரும் நீரூற்றுக்கள் மற்றும் ஆறுகள் என்பன வற்றுவதாலும் மாசடைவதாலும் சுத்தமான குடி நீருக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்படப் போவதாகக் கணிக்கப் பட்டுள்ளது. நிகழ்காலத்தில் ஏற்கனவே அங்கு தண்ணீர்ப் பிரச்சினை நிலவுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மனித இனம் விழித்துக் கொண்டு முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதாவது ஒவ்வொரு வருடமும் 4.5 நாட்களுக்கு பூமியின் வளங்களை சேமித்தால் 2050 இல் கூட இயற்கை எமக்கு சாதகமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்