உலகம்
Typography

சொத்துக் குவிப்பு வழக்கில் பாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டால் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து புதிய பிரதமராகப் பதவியேற்ற ஷஹீட் கக்கான் அப்பாஸி இன்று புதன்கிழமை நவாஸ் ஷெரீஃபை சந்தித்துப் பேசியுள்ளார்.

நவாஸ் ஷெரீபின் ஆட்சிக் காலத்தில் பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த அப்பாஸி பிரதமராகப் பதவியேற்று முதலாவது அலுவலக நாளான இன்று இச்சந்திப்பை மேற் கொண்டுள்ளார். நவாஸ் ஷெரீஃப் தனது குடும்பத்துடன் தங்கி இருக்கும் வடக்கு ரிசோர்ட் நகரான முரீ இல் இச்சந்திப்பு இடம்பெற்றது.

PML-N எனப்படும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் இன்னமும் மிக உறுதியான பெரும்பான்மை வகிப்பதால் புதிய கேபினட்டை இன்று நியமிக்க நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது நட்பு அமைச்சர்கள் சட்டத்தரணிகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டிய நிலையில் புதிய பிரதமர் ஷஹீட் கக்கான் அப்பாஸி உள்ளார். இதனால் தான் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் புதிய திடீர் அரசியல் மாற்றம் உலகில் அணுவாயுத வல்லரசுகளில் ஒன்றான அந்நாட்டை அரசியல் குழப்ப நிலைக்கு மறுபடியும் ஒருமுறை தள்ளி விடக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில் இறுதியாக 2013 தேர்தலுக்குப் பின் கட்டி எழுப்பப் பட்டு வந்த பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துக்கும் பின்னடைவை ஏற்படுத்தி விடுமோ என்றும் ஊகிக்கப் படுகின்றது. இந்நிலையில் பாகிஸ்தானின் சக்தி வாய்ந்த இராணுவம் தொடர்ந்து பதவி நீக்கம் செய்யப் பட்ட நவாஸ் ஷெரீஃப் இனது கையில் தான் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்