Saturday, May 18th

Last update06:50:49 PM

46 வருடங்களுக்கு பிறகு இந்தியாவிடம் வந்து சேர்ந்த கடிதப்பொதி


இந்தியாவின் ஏர் இந்திய விமானமொன்று 46 வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டின் அல்ஃப்ஸ் மலைச் சாரலில் விபத்துக்குள்ளாகி இருந்தது.

சமீபத்தில் இவ் விமானம் காணாமற் போன பகுதியான பிரெஞ்சு அல்ஃப்ஸ் தொடரின் பளாங் மலையில் இருந்து இவ் விமானத்தின் உள்ளே இருந்து சில முக்கிய கடிதங்கள் அடங்கிய பொதி ஒன்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

நேற்று முன் தினம் திங்கட்கிழமை பாரிஸ் இல் உள்ள இந்தியத் தூதரகத்தில் இருந்து அதன் அதிகாரிகளில் ஒருவரான சத்வந்த் கனாலியா என்பவர் இந்தப் பொதியை உரிய முறைப்படி பிரான்ஸின் சமோனிக்ஸ் நகரில் வைத்து பிரெஞ்சு அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

விமானத்தின் உள்ளே இருந்த முக்கிய தகவல்கள அடங்கிய கடிதங்களைக் கொண்டிருக்கும் பை என்று கருதப் படும் இந்தப் பொதி குறித்த பிளாங் மலையில் கிளேசியர் எனும் பாரிய பனிச்சறுக்கல் காரணமாக வெளியே வந்து கண் பார்வைக்குத் தெரியும் படி இருந்துள்ளது. இதை அவதானித்த சுற்றுலாப் பயணிகளில் சிலர் இவ்விபரத்தை தெரிவித்ததை அடுத்து அங்கு வந்த மீட்புப் பணியினர் மிகவும் முயன்று அந்தப் பொதியை எடுத்து வந்ததாகக் கூறப்படுகின்றது.

இந்த ஏர் இந்திய விமானம் மும்பையில் இருந்து நியூயோர்க் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது ஜனவரி 26 1966 ஆம் ஆண்டு அல்ஃப்ஸ் மலைத் தொடரில் மோதி விபத்துக்குள்ளாகி இருந்தது.
 
இதில் அவ்விமானத்தில் பயணம் செய்த 117 பயணிகளும் பலியாகியிருந்தனர். இறந்தவர்களில் இந்தியாவின் முன்னணி வாய்ந்த அணு விஞ்ஞானியான ஹோமி ஜே பாபா என்பவரும் அடங்குகின்றார். இவர் தமது சேவைக்காக இந்திய அணு இயல் துறையின் தந்தையாக அறியப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus