உலகம்
Typography

நேற்று பிரான்ஸில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் இம்மானுவேல் மெக்ரோனின் புதிய அரசியல் கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளது.

மொத்தம் 577 இடங்களை கொண்ட தேசிய சட்டமன்றத்தில் 360 க்கு மேற்பட்ட தொகுதிகளில் அவரது ரிபப்ளிக் என் மார்க் கட்சி வெற்றி பெற்றது. அதோடு பல பழமையை வாய்ந்த வலதுசாரி, இடது சாரி கட்சிகள் தோல்வியடைந்தன. தீவிர வலது சாரி கட்சி வேட்பாளரும், கடந்தமுறை ஜனாதிபதி தேர்தலில் மெக்ரோனை எதிர்த்து இரண்டாம் சுற்றில் போட்டியிட்டவருமான மெரின் லெ பென் மாத்திரம், ஹெனின்-பவுமோண்டின் வடக்கு தொகுதியில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு நுழைந்துள்ளார்.

Most Read