உலகம்
Typography

 

அமெரிக்காவிலிருந்து வடகொரியாவுக்கு சுற்றுலாவுக்கு சென்ற 21 வயது மாணவர் ஒட்டோ வர்ம்பியெர்  கோமா நிலையில் மீண்டும் அமெரிக்காவுக்கு திருப்பியனுப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டோ வரெம்பிஎர் எனும் குறித்த மாணவர், அமெரிக்காவிலிருந்து வடகொரியாவுக்கு சுற்றுலா செல்வதற்காக சீன சுற்றுலா இணையத்தளம் ஒன்றின் ஊடாக விசாவுக்கு விண்ணப்பித்து, பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் தங்கியிருந்த சுற்றுலா விடுதியில் அரசியல் பேனர் ஒன்றை களவெடுத்த செயல் கண்காணிப்பு கமெராக்களில் பதிவாகியுள்ளதாக குற்றம் சாட்டி, தமது நாட்டுக்கு எதிராக சதிவிரோத செயல்களில் ஈடுபடுகிறார் எனும் குற்றச்சாட்டில் வடகொரியா அவருக்கு 15 வருடகால கடு ஊழியத் தண்டனை வழங்கியது. இந்நிலையிலேயே அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறையில் கோமாநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அங்கிருந்து அமெரிக்கா தற்போது அவரை மீட்டெடுத்துள்ளது. இந்நிலையில் அவருக்கு விசா பெற்றுக் கொடுத்த சீன இணையத்தளமோ, தாம் இதுவரை பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு விசா பெற்றுக் கொடுத்துள்ளதாகவும், ஒருவரைத் தவிர மற்றைய அனைவரும் எந்தவித சிக்கலும் இன்றி திரும்பி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்