Wednesday, Jun 19th

Last update06:51:21 PM

கிழக்கு ரஷ்யாவில் பயங்கர நில அதிர்வு

இன்று காலை ரஷ்யாவில் கிழக்கு கடற் கரையில் உள்ள ஒகோட்ஸ்க் பகுதியில் 7.7எனும் ரிக்டர் அளவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு அறிக்கையின் படி இவ் நில நடுக்கம் பசிபிக் கடலில் 625கி.மீ ஆழத்தில் மையமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்க படவில்லை.

இந்நிலையில் ஜப்பான் அரசின் தகவல் படி இந்நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவிலேயே பதியப்பட்டிருப்பதாக மாறுபட்ட தகவல்களும் வெளிவந்திருந்தன. இந்நிலநடுக்கங்களால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என ஜப்பானிய, ரஷ்ய விரைவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  ரஷ்யாவில் ஏற்பட்ட இந் நில அதிர்வு அதன் அருகிலிருந்த ஜப்பானிலும் உணரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர்  ஈரானிலும், சீனாவிலும் நில நடுக்கங்கள் ஏற்றபட்டிருந்தன. இதில் ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கொல்லபப்ட்டவரின் எண்ணிக்கை 350 ஐ கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus