உலகம்
Typography

தேர்தல் ஆணையம்னா இப்படி இருக்கணும் எனும்படி அசத்தும் நடவடிக்கையை
பிரித்தானிய தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.

பிரித்தானிய நாட்டை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ரூ1.30 கோடி அபராதம்
விதித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய நாட்டின் தேர்தல் ஆணைய தலைமை அதிகாரியான
Sir John Holmes என்பவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கடந்த 2015-ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது
கன்சர்வேட்டிவ் கட்சி தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளது.தேர்தல்
பிரச்சாரத்திற்கு கட்சி நிதியை பயன்படுத்தாமல் பொதுமக்களின் வரிப்பணத்தை
பயன்படுத்தியுள்ளது. மேலும், 2014-ம் ஆண்டில் நடைபெற்ற 3
இடைத்தேர்தல்களிலும் 2015-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும்
கட்சி செலவிட்ட தொகைக்கான ஆதாரங்களை முறைப்படி தேர்தல் ஆணையத்திடம்
தாக்கல் செய்யவில்லை..

குறிப்பாக, 2015-ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி
செலவிட்டதாக கூறப்படும் 104,765 பவுண்டிற்கு ஆதாரம் எதுவும்
இல்லை.118,124 பவுண்ட் தொகை செலவினங்களை தவறாக அல்லது போதுமான ஆதாரங்கள்
இல்லாமல் தேர்தல் ஆணையத்திடம் கன்சர்வேட்டிவ் கட்சி தாக்கல் செய்துள்ளது.
மேலும், 52,924 பவுண்ட் மதிப்புள்ள ஊதியத் தொகை கொடுத்ததற்கான எவ்வித
ரசீதுகளையும் கன்சர்வேட்டிவ் கட்சி தாக்கல் செய்யவில்லை.

எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக கன்சர்வேட்டிவ்
கட்சிக்கு 70,000 பவுண்ட்(1,30,37,446 இலங்கை ரூபாய்) அபராதம் விதிப்பதாக
தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS