உலகம்
Typography

மூத்த ஈராக் கமாண்டரான லெப்டினண்ட் ஜெனெரல் தலிப் ஷகாட்டி என்பவர் செவ்வாய்க்கிழமை AP ஊடகத்துக்கு அளித்த செவ்வியில் ஈராக்கின் 2 ஆவது மிகப்பெரிய நகரான மோசுலை ISIS இடமிருந்து இன்னும் 3 மாதங்களுக்குள் கைப்பற்றி விட முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

ஆயினும் குறித்த சண்டை வழக்கமான கொரில்லா போர் முறையாகவே நீடிக்கவுள்ளதால் மிகத் திருத்தமாக இன்னும் எவ்வளவு நாட்களுக்குள் மோசுலைக் கைப்பற்ற முடியும் என்பதைக் கணிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆக்டோபர் முதற்கொண்டு மோசுலைக் கைப்பற்ற சுமார்
30 000 ஈராக்கியத் துருப்புக்கள் போராடி வரும் நிலையில் இந்த வருடத் தொடக்கத்துக்கு முன்பே மோசுலை முற்றாகக் கைப்பற்றி விட முடியும் என்றே எதிர்பார்க்கப் பட்டது. தற்போது மோசுலின் 3/4 பகுதியே ஈராக் படை வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக ஈராக்கின் விசேட அதிரடிப் படையினர் மோசுலின் கிழக்குப் பகுதியை மெது மெதுவாக முன்னேறிக் கைப்பற்றி வந்துள்ளனர். ஆனாலும் ISIS உம் இழப்புக்களைச் சந்தித்து வரும்போதும் ஈடு கொடுத்து மிகத் தீவிரமாகவே சண்டையிட்டு வருகின்றது. ஆயினும் முன்பிருந்ததை விட இப்போது ஈராக்கிய துருப்புக்கள் மீதான ISIS இன் கார்க் குண்டுத் தாக்குதல் குறைவடைந்து வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் ஷகாட்டி. இதற்கு அமெரிக்கக் கூட்டுப் படைகளின் வான் தாக்குதலும் காரணம் என்று கூறப்படுகின்றது.

மோசுல் நகரம் மீதான ஈராக் படைகளின் முற்றுகை ஈராக்கில் ISIS இன் வீழ்ச்சிக்கான ஆரம்பம் என ஷகாட்டி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Most Read