உலகம்
Typography

ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரைக் குறி வைத்து ஆளுனர் மாளிகை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 11 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.

இதற்கு முதல் நாள் தான் தலைநகர் காபூலில் பாராளுமன்ற வளாகத்தில் நடத்தப் பட்டிருந்த இரட்டைக் குண்டுத் தாக்குதலில் 38 பேர் கொல்லப் பட்டிருந்தனர். இந்நிலையில் அண்மைய தாக்குதல் குறித்து UAE இன் வெளியுறவுத் துறை வெளியிட்ட செய்தியில் ஆப்கானுக்கான UAE தூதர் ஜுமா முஹமது அப்துல்லா அல் காபி மற்றும் சில தூதரக அதிகாரிகள் காயம் அடைந்ததாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. கொல்லப் பட்டவர்களில் 5 முக்கிய தூதரக அதிகாரிகள் அடங்குவதும் குறிப்பிடத்தக்கது.

தலிபான்கள் தாம் இந்தத் தாக்குதலை நடத்தவில்லை என அறிவித்துள்ள நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கொல்லப் பட்ட அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக 3 நாட்களுக்குத் தமது நாட்டுக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலை அடுத்து டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள அபுதாபியின் சக்தி வாய்ந்த முடிக்குரிய இளவரசர் செயிக் முஹமட் பின் சாயேட் அல் நஹ்யான் இது போன்ற தீவிரவாதத் தாக்குதல்கள் ஒருபோதும் ஆப்கானில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மனிதாபிமான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த முடியாது என்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்