உலகம்
Typography

அமெரிக்க அதிபராக ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர் பதவிக்கு தனது மருமகனான ஜாரேட் குஷ்னெர் என்பவரை திங்கட்கிழமை நியமித்துள்ளார்.

இளம் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான குஷ்னெர் இப்பதவியை ஏற்கும் பட்சத்தில் அமெரிக்காவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளிலும் முக்கியமாக மத்திய கிழக்குப் பிரச்சினைகள் மற்றும் வர்த்தக விடயங்களிலும் முக்கிய செல்வாக்கு செலுத்துவார் எனக் கருதப் படுகின்றது.

குஷ்னெர் டிரம்பின் மகளான இவாங்காவின் கணவர் ஆவார். மேலும் தேர்தல் பிரச்சார சமயத்தில் இவாங்கா தனது தந்தையான டிரம்புக்கு முக்கிய ஆலோசகராகச் செயற்பட்டார். இவாங்கா வெள்ளை மாளிகையில் எப்பதவியினையும் வகிக்க மாட்டார் எனினும் 3 குழந்தைகளின் தாயான அவர் தனது குடும்பத்தை நியூயோர்க்கில் இருந்து வாஷிங்டனுக்கு நகர்த்தும் திட்டத்தில் உள்ளார்.

டிரம்ப் தனது குடும்ப அங்கத்துவர் ஒருவரை வெள்ளை மாளிகையின் முக்கிய பதவிக்குத் தெரிவு செய்தமையை அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளதுடன் அவர் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளனர். வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக குஷ்னர் நியமிக்கப் பட்டதை அடுத்து குஷ்னர் தனது ரியல் எஸ்டேட் தலைவர் பதவியினை ராஜினாமா செய்வார் என அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதை விட குஷ்னர் வெள்ளை மாளிகையின் ஆலோசகராக சம்பளம் பெறாது பணியாற்றுவார் எனவும் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்