உலகம்
Typography

ஈரானில் 1989 முதல் 1997 வரை இரு முறை அதிபராகப் பதவி வகித்த 82 வயதாகும் அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானி மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை உயிர் நீத்துள்ளார்.

ஈரானில் இஸ்லாமியக் குடியரசை நிறுவுவதில் முக்கியமானவராகச் செயற்பட்ட இவரின் மறைவை அடுத்து உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரின் பூதவுடலுக்கு ஈரானின் ஆன்மிகத் தலைவர் அயதுல்லா அலி கமெனி மற்றும் ஈரான் அதிபர் அதிபர் ஹசன் றௌஹானி ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ஏற்கனவே ஈரானின் உள்துறை அமைச்சராகவும் நாடாளுமன்றத் தலைவராகவும் செயற்பட்ட இவர் அதிபர் ஹசன் றௌஹானி ஆட்சியில் உள்ள போதும் அரசியலில் செல்வாக்கு செலுத்தி வந்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்