உலகம்
Typography

கடந்த வார இறுதியில் தென் சூடானின் தலைநகரான ஜுபாவில் அமைந்துள்ள உணவு விடுதி ஒன்றில் குடி போதையில் கோபமுற்ற ஒரு உதைபந்தாட்ட ரசிகர் ஏனைய உதைபந்தாட்ட ரசிகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சனிக்கிழமை இரவு குறித்த விடுதியில் இங்கிலீஸ் பிரிமியர் மேட்ச்சை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் மீது நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் காயம் அடைந்ததாகவும் பிரதி போலிஸ் பேச்சாளர் அமொண்டொக் தெரிவித்துள்ளார்.

காயமுற்றவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் வெறும் 0.5 டாலர் மட்டுமே செலவிட்டதால் அவரை உணவு விடுதி நிர்வாகம் உதைபந்தாட்ட போட்டியைப் பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் இதனால் கோபமுற்ற அவர் பின்னர் துப்பாக்கியுடன் திரும்பி வந்து அதிரடியாகத் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிய வருகின்றது. ஜுபாவுக்கு தென்மேற்கே உள்ள ஓர் வறிய கிராமமான குரே இல் உள்ள உணவு விடுதியில் காலை 9 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

துப்பாக்கிதாரியின் பின்னணி குறித்து இதுவரை தெரிய வரவில்லை என்ற போதும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக தென் சூடானின் அரச தரப்பில் அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் இச்சம்பவத்தை தென் சூடான் அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது. 3 வருடங்களுக்கு முன்னர் தென் சூடானில் ஆரம்பமான சிவில் யுத்தத்தால் அங்கு பாதுகாப்பின்மை மோசமாகி வருகின்றது. 2011 இல் சூடானிடம் இருந்து விடுதலை பெற்ற தென்சூடானில் நடைபெற்று வரும் சிவில் யுத்தத்தைத் தடுக்க சர்வதேச தரப்பு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் இதுவரை தோல்வியில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்