உலகம்
Typography

சுமார் 20 மாதங்களாக நீடித்து வரும் யேமென் உள்நாட்டுப் போரில் சுமார் 7000 இற்கும் அதிகமான மக்கள் பலியாகி இருப்பதாகவும் 37 000 பேர் வரை படுகாயம் அடைந்திருப்பதாகவும் உலக சுகாதாரத் தாபனமான WHO அறிவித்துள்ளது.

மேலும் மேலதிகமாக 21 மில்லியன் யேமென் மக்களுக்கு உடனடி வைத்திய சேவைகள் தேவைப் படுவதாகவும் ஐ.நா இன் சுகாதார ஏஜன்ஸி அறிவித்துள்ளது.

மார்ச் 26 2015 முதல் யேமெனின் ஈரானின் ஆதரவுடன் போராடி வரும் ஹௌத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் சவுதி கூட்டணி நாடுகளின் வான் தாக்குதலுடன் போரிட்டு வரும் அரச படைகளுக்கும் இடையே கடும் யுத்தம் இடம்பெற்று வருகின்றது. அரேபியத் தீபகற்பத்தின் மிக வறிய நாடான யேமெனில் இந்த யுத்தம் காரணமாக கடும் நோய்கள் பரவவும் போசாக்கின்மை பிரச்சினை இன்னமும் வளர்ச்சியுறவும் வாய்ப்பு இருப்பதாக சர்வதேச நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மேலும் WHO இன் அறிக்கைப் படி யேமென் போரினால் உள்நாட்டில் மட்டும் 2.1 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

 இதைவிட அங்கிருக்கும் மருத்துவ நிலையங்களில் அரைவாசிப் பங்கு மூடப் பட்டிருப்பதாகவும் ஏனையவையும் குறிப்பிட்ட சில நேரங்களுக்கே பணியாற்றுவதாகவும் கூடத் தெரிய வந்துள்ளது. மேலும் யேமெனின் அனைத்து மாவட்டங்களிலும் மொத்தமாக 40% வீதத்துக்கும் அதிகமான மருத்துவர்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் இது மிக மோசமான நிலமை எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இதேவேளை யேமெனில் யுத்தத்தில் ஈடுபட்டு வரும் இருதரப்பும் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஐ.நா சபை இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்