உலகம்
Typography

திங்கட்கிழமை வரை சுமார் 50 இற்கும் அதிகமான காட்டுத் தீ அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் புறநகர்ப் பகுதியைத் தாக்கி வருவதுடன் இதுவரை 6600 ஹெக்டேர் நிலப் பகுதி எரிந்து சாம்பல் ஆகியிருப்பதாகவும் இதனால் நகர்ப் பகுதிகளுக்கும் ஆபத்து ஏற்படவுள்ளதாகவும் தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

பிரதானமாக போர்ட் ஸ்டெபென்ஸ் இலுள்ள குடிமக்களை எச்சரிக்கையாக இருக்கும் படியும் முடிந்தால் வதிவிடங்களை விட்டு வெளியேறும் படியும் தீயணைப்புப் படையினர் அறிவுறுத்தியுள்ளனர். இப்பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து இருப்பதாலும் கடுமையான வெப்பக் காற்று வீசுவதனாலுமே இம்முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

இம்மாநிலத்தில் கிட்டத்தட்ட 52 ஆக்டிவான தீச்சுவாலைகள் பரவி வருவதாகவும் இதில் 12 பகுதிகளை மட்டுமே இன்னமும் கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினர் போராடி வருவதாகவும் அறிவிக்கப்  பட்டுள்ளது. இந்தக் காட்டுத் தீயால் பல வீடுகள் சேதமடைந்துள்ள போதும் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. போர்ட் ஸ்டெபென்ஸ் இற்கு அண்மையில் தீயைப் பரவச் செய்த குற்றத்துக்காக இரு இளவயதினரைப் போலிசார் கைது செய்துள்ளனர்.

வழமையாக நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் கோடைக் காலம் அல்லது வசந்த காலத்தில் தான் காட்டுத் தீ ஏற்படும் என்ற போதும் இம்முறை குளிர்காலம் ஏற்பட மிக அண்மையில் இத்தீ பரவி இருப்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்