உலகம்
Typography

அலெப்போவில் பாரிய தாக்குதல் திட்டத்தை முன்னெடுக்கவுள்ள ரஷ்யா அங்குள்ள கிளர்ச்சியாளர்கள் வெளியேற வெள்ளிக்கிழமை மாலை வரை கெடு விதித்துள்ளது. மேலும் கிளர்ச்சியாளர்கள் வெளியேறவென இரு சிறப்புப் பாதைகளும் பொது மக்கள் வெளியேறவென 6 பிற பாதைகளும் ஒதுக்கப் பட்டிருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. 

சிரியாவின் அலெப்போ மாநிலத்தில் ISIS போராளிகள் மற்றும் கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக நீண்ட நாட்களாகவே சிரிய அரச படைகளுடன் இணைந்து ரஷ்ய வான் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் பெரும்பாலான மக்களும் கொல்லப் பட்டு வந்தனர். இந்நிலையில் தான் ஐ.நா இன் வேண்டுகோளை ஏற்று பொது மக்கள் பாதுகாப்பாக வெளியேற குறிப்பிட்டளவு அவகாசம் ஒதுக்கிக் கொடுக்கப் பட்டுள்ளது. மேலும் வான் தாக்குதலும் தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளது. மேலும் ரஷ்ய அரசு தரப்பில் கிளர்ச்சியாளர்கள் தங்கள் தாக்குதலை நிறுத்தா விட்டால் யுத்த நிறுத்தத்தை நீட்டிக்க முடியாது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இதேவேளை ஜப்பானில் உள்ள அமெரிக்கக் கடற்படைத் தளம் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி உட்பட ஆயுதங்களுடன் நுழைந்ததால் அது அதிரடியாக மூடப் பட்டுள்ளது. மேலும்  உள்ளே நுழைந்த மர்ம நபரைத் தேடும் பணியும் தீவிரமாக முடுக்கி விடப் பட்டுள்ளது.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்