உலகம்
Typography

ஸ்பெயினின் பாராளுமன்றத்தில் 170 சட்ட வல்லுனர்கள் பங்கேற்ற வாக்கெடுப்பில் 111 இற்கு 68 என்ற வாக்கு வீதத்தில் மரியானோ ராஜோய் வெற்றி பெற்று ஸ்பெயினின் பிரதமராக மீளவும் தெரிவாகியுள்ளார். 2015 டிசம்பரில் ஸ்பெயினில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எந்தக் கட்சியும் பெரும்பான்மைப் பலம் பெறாத நிலையில் அண்மைய பிரதமர் தேர்வின் பின்னரே முழு வீச்சில் இயங்கும் அரசாட்சி ஸ்பெயினில் ஏற்பட்டுள்ளது.

மரியானோ ராஜோய் 2004 ஆம் ஆண்டு பொது மக்கள் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். பின்னர் 2004 இற்கும் 2011 இடைப்பட்ட காலத்தில் ஜோஷே லூயிஸ் றொட்ரிகுவெஸ் ஷப்பெட்டெரோ இன் அரசின் கீழ் இவர் எதிர்க்கட்சித் தலைவராகக் கடமையாற்றி இருந்தார். பின்பு 2011 இல் நடைபெற்ற தேர்தலில் பொதுமக்கள் கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்ற பின்னர் மரியானே ராஜோய் பிரதமராகப் பதவி ஏற்றார்.

எனினும் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பொது மக்கள் கட்சி  பெரும்பான்மைப் பலத்தை இழந்தது. ஆனால் பிற கட்சிகளும் பெரும்பான்மைப் பலத்தைப் பெறத் தவறியதால் ஸ்பெயினில் பலம் இழந்த ஆட்சி ஏற்பட்டது. இதை அடுத்து 2016 ஆம் ஆண்டு இம்முறை பாராளுமன்ற வாக்கெடுப்பில் மாரியானோ ராஜோய் வெற்றி பெற்று பிரதமர் ஆனதன் மூலம் ஸ்பெயின் அரசு மறுபடியும் ஸ்திரத் தன்மையைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்