உலகம்
Typography

உலக அணு வல்லரசுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வியாழக்கிழமை ஐ.நா பொதுச் சபையில் அணுவாயுதங்களைத் தடை செய்வதற்கான புதிய ஒப்பந்தம் தொடர்பில் வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது.

ஆஸ்ட்ரியா, அயர்லாந்து, மெக்ஸிக்கோ, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளால் ஐ.நா பொதுச் சபையில் முன்வைக்கப் பட்ட இந்த வாக்கெடுப்பு 123 இற்கு 38 எனும் வீதத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளது. முக்கிய அணு வல்லரசுகள் எதிர்ப்புத் தெரிவித்த இந்த வாக்கெடுப்பில் 16 நாடுகள் பங்கேற்கவில்லை.

ஐ.நா பாதுகாப்புச் சபையின் 5 நிரந்தர உறுப்பு நாடுகளில் பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகியவை இந்த வாக்கெடுப்பில் எதிராக வாக்களித்தன. சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்கவில்லை. வடகொரியாவிடம் இருந்து அணுவாயுத அச்சுறுத்தலை எதிர்நோக்கி வரும் தென் கொரியாவும், அணுவாயுதங்களுக்கு எதிராக மிக நீண்ட காலமாகப் பிரச்சாரம் செய்து வரும் ஜப்பானும் இந்த வாக்கெடுப்பில் எதிராக வாக்களித்துள்ளன.

Most Read