உலகம்
Typography

பிரான்ஸின் பாரிய அகதி முகாமான Calais Jungle இல் கடந்த சில நாட்களாகப் பகுதி பகுதியாகக் கலைக்கப் பட்டு வரும் நிலையில் கடந்த வியாழக்கிழமை சுமார் 100 சிறுவர்களுக்கு தங்குவதற்கு உரிய இடத்தை ஏற்படுத்தித் தர அதிகாரிகள் தவறிய காரணத்தால் அச்சிறுவர்கள் இரவு முழுதும் மிகவும் சேதமடைந்த கலே முகாமிலேயே மீள அழைக்கப் பட்டு தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

பிரெஞ்சு அதிகாரிகளின் இந்த கவனமற்ற செயலை மனித உரிமைகள் அமைப்பினர் மற்றும் தொண்டூழியர்கள் கண்டித்துள்ளனர். திங்கட்கிழமை தொடங்கிய முகாமை அழிக்கும் பணி அமைதியான முறையிலேயே நடைபெறும் என பிரெஞ்சு அதிகாரிகள் அறிவித்திருந்த போதும் முகாமில் இருந்த அகதிகளுக்கும் போலிசாருக்கும் இடையே வியாழக்கிழமை கலகம் மூண்டது. மேலும் சில இடங்கள் ஆத்திரமடைந்த அகதிகளால் தீ வைக்கப் பட்டது. இதனால் போலிசார் பலர் மீது தடியடிப் பிரயோகம் செய்தும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் கலவரத்தை அடக்க வேண்டியிருந்தது. மேலும் முகாமில் பதிவு செய்யப் படாதவர்கள் போலிஸ் கஸ்டடிக்குக் கொண்டு செல்லப் படுவர் என்றும் எச்சரிக்கப் பட்டது.

இந்நிலையில் மிக நீண்ட வரிசையில் சிறுவர்களுடன் காத்திருந்த தொண்டூழியர்களால் அன்றைய தினமே பதிவு செய்ய முடியவில்லை. ஈற்றில் முறையாக இச்சிறுவர்கள் கவனிக்கப் படாது சேதமடைந்த முகாமிலேயே தூங்க வைக்கப் பட்டதாகக் கூறப்படுகின்றது.

பிரெஞ்சு அதிகாரிகளின் இக் கவனமற்ற செயலை ஐ.நா இன் சிறுவர்களுக்கான ஏஜன்ஸியான UNHCR உம் கண்டித்ததுடன் இவ்வாறு இச்சிறுவர்கள் கவனிப்பாரற்று விடப்பட்டால் ஆள்கடத்தும் கும்பல்களில் மாட்டிக் கொள்ளும் அபாயம் இருந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்