உலகம்
Typography

பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டெர்ட்டே தமது நீண்ட கால நட்பு நாடான அமெரிக்காவை விட்டு விலகும் நேரம் வந்து விட்டது என்று அறிவித்துள்ளமைக்கு அமெரிக்கா விளக்கம் கேட்டுள்ள நிலையில் டுட்டெர்டே இந் கருத்து சுதந்திரமானது என்றும் இது பிலிப்பைன்ஸ் மக்களின் மன நிலையையே பிரதிபலிக்கின்றது எனவும் சீனா டுட்டெர்டே இனைப் பாதுகாத்து கருத்து வெளியிட்டுள்ளது.

 இது உலக அரங்கில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தற்சமயம் 4 நாள் உத்தியோகபூர்வ பயணமாக ரொட்ரிகோ டுட்டெர்டே சீனா சென்றுள்ளதுடன் சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் அரசியல் இராஜதந்திர ரீதியிலானதும் பொருளாதாரம் சம்பந்தமாகவும் முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சீன தொழில் அதிபர்கள் கூட்டதில் டுட்டெர்ட்டே பேசுகையில் அமெரிக்காவுடன் பிலிப்பைன்ஸ் இதுவரை பேணி வந்த இராணுவ பொருளாதார  உறவுகளில் இருந்து பிரிவதாகத் தெரிவித்திருந்தார்.

மேலும் சீனாவுடன் வர்த்தகம், உட்கட்டமைப்பு மற்றும் வேளாண்மை ஆகிய துறைகளில் முக்கிய 13 ஒப்பந்தங்களில் பிலிப்பைன்ஸ் கைச்சாத்திட்டுள்ளது. இத்துறைகளில் சீனா சுமார் $13.5 பில்லியன் டாலர் பெறுமதியிலான முதலீட்டை பிலிப்பைன்ஸில் இடவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS