உலகம்
Typography

 பெரு  மற்றும் பொலிவியா ஆகிய நாடுகளின் ஊடாகச் செல்லும் பெரிய நன்னீர் ஏரி மற்றும் அதன் கிளைகளில் இன்றைய உலகில் அருகி வரும் அரிய தவளை இனமான டிட்டிகாக்கா நீர்த் தவளைகள் வாழ்ந்து வருகின்றன. இந்த நன்னீர் ஏரியின் ஒரு பகுதியான பெருவின் கோட்டா நதி அண்மைக் காலமாக பாரிய அளவில் மாசுபட்டதன் காரணமாக பரிதாபமாக 10 000 இற்கும் அதிகமான தவளைகள் உயிரிழந்து நதியில் மிதப்பதாகக் கூறப்படுகின்றது.

இக் கோட்டா நதி மாசுபட்டதற்கு தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கழிவு நீரே காரணம் எனக் கருதப் படும் நிலையில் பெரு அரசோ கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை கட்டுவது குறித்த கோரிக்கைகளைத் தாம் நிராகரித்ததாக் கூறியுள்ளது. தற்போது இந்தத் தவளைகளின் இறப்பு தொடர்பான விசாரணையை அந்நாட்டின் சுற்றுச் சூழல்  முகாமை அமைப்பு ஆரம்பித்துள்ளது. Scrotum frog என அழைக்கப் படும் முதுகில் பை போன்ற தோலை உடைய இத்தவளை இனம் உலகில் வசிக்கும் ஒரே ஓர் இடம் டிட்டிக்காக்கா ஏரி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 30 மைல் நீளத்துக்கு செத்து மிதக்கும் இத்தவளைகளின் மாதிரியை பரிசோதனைக்காகத் தற்போது தலைநகர் புனோ இற்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளது. டிட்டிக்காகா தவளையின் முட்டை மற்றும்  லார்வாக்களை வட அமெரிக்காவின் குறிப்பிட்ட சில மக்கள் உணவாகவும் உட்கொண்டு வருவதுடன் பெரு நாட்டவரும் உணவுக்காக பாரியளவில் இதனை வேட்டையாடி வருகின்றனர். இக்காரணத்தாலும் இத்தவளை இனம் அருகி வருவது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்