உலகம்
Typography

நாங்கள் அமைதியாக இருக்கிறோம் என்று, எங்கள் நாட்டை பலவீனமாக நினைக்க வேண்டாம் என்று, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். 

இந்திய ராணுவ வீரர்கள் எல்லை பாதுகாப்பு கோட்டுக்கு வெளியே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்து, தீவிரவாத முகாம்களைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியிட்டது, இந்திய பாதுகாப்புத் தலைமையும், உளவுத்துறை தலைமையும்.ஆனால், இந்திய ராணுவ வீரர்கள் எல்லை தாண்டவில்லை என்றும், எல்லையில் இருந்து அவர்கள் தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இருவர் பலியானார்கள் என்றும், மேலும், 7 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் நவாஸ் தெரிவித்துள்ளார்.  

அதோடு, இந்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தயார் நிலையில்தான் உள்ளது என்றும், நாங்கள் அமைதியாக இருப்பதனால், பாகிஸ்தானை பலவீனமான நாடு என்று எண்ண வேண்டாம் என்றும் நவாஸ் காட்டமாகப் பேசியுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்