உலகம்
Typography

பாகிஸ்தானில் நடக்க இருந்த சார்க் நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டை நேபாள் ரத்து செய்து அறிவித்துள்ளது. 

காஷ்மீரின் உரி எல்லையில், பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிதத்தில் இந்திய ராணுவ முகாம்களில் தீவிரவாதஹிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 17 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்தியா பாகிஸ்தான் மீது கடும் கோபத்தில் இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, சார்க் நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துக்கொள்ள முடியாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளதாகத் தெரிய வருகிறது. இந்தியா, ஆப்கானிஸ்தான், நேபாள், பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் சார்க் நாடுகளின் கூட்டமைப்பில் உள்ளன.  

இதில் இந்தியா, நேபாள் உள்ளிட்ட 4 நாடுகள் மாநாட்டில் கலந்துக்கொள்ள முடியாது என்று அறிவித்த நிலையில், நேபாள் நாடு சார்க் நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு நடைபெறாது என்று அறிவித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்