உலகம்
Typography

கொலம்பிய அரசு மிக நீண்ட காலமாக குழப்பத்தில் ஈடுபட்டு வந்த ஃபார்க் (FARK) கிளர்ச்சிக் குழுவுடன் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. திங்கட்கிழமை அதிபர் ஜுவான் மானுவெல் சந்தோஸ் மற்றும் கிளர்ச்சிக் குழுத் தலைவர் றொட்ரிகோ லொண்டொனோ ஆகிய இருவரும் சுமார் 2500 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் விசேட அதிதிகள் முன்னிலையில் இந்த அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகளில் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் மற்றும் அமெரிக்க மாநிலச் செயலாளர் ஜோன் கெர்ரி ஆகியோரும் அடங்குகின்றனர். நேற்று கைச்சாத்திடப் பட்ட அமைதி ஒப்பந்தம் மூலம் கொலம்பியாவில் சுமார் 1/2 நூற்றாண்டுகளாக நீடித்த குழப்ப நிலை முடிவுக்கு வந்துள்ளது.

சுமார் 15 லத்தீன் அமெரிக்க நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் கொலம்பிய அரசு மற்றும் கிளர்ச்சிக் குழு ஆகிய இரு தரப்பும் 297 பக்கங்கள் கொண்ட ஒப்பந்த படிவத்தில் கைச்சாத்திட்டனர். கொலம்பிய உள்நாட்டுக் குழப்பத்தில் சுமார் 220 000 பேர் பலியாகி உள்ளதுடன் மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்றைய வைபவத்தில் கிளர்ச்சிக் குழுத் தலைவர் லொண்டொனோ உரையாற்றுகையில் இந்த அமைதி ஒப்பந்தம் கொலம்பியாவுக்குக் கிடைத்த வெற்றி என்றும் இது இன்றைய உலகில் யுத்தத்தில் ஈடுபட்டு வரும் ISIS மற்றும் இஸ்ரேல் பாலஸ்தீன குழுக்களும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்பதற்கு நல்ல உதாரணம் என்று தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கொலம்பியாவில் அமைதி மீளத் திரும்பியதை அந்நாட்டு மக்கள் பல பாகங்களிலும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்