உலகம்
Typography

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இனிமேல் சிறிய தவறு செய்தாலும் அவற்றின் மீது தாக்குதல் தொடுப்போம் என ஈரான் திடீர் மிரட்டல் விடுத்துள்ளது.

ஜனவரி 3 ஆம் திகதி ஈரான் படைத் தளபதியான காசிம் சுலைமானியினை ஈராக் விமான நிலையத்துக்கு அருகே டிரோன் தாக்குதல் மூலம் அமெரிக்கா கொலை செய்தது.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவும், ஈரானும் தமக்கிடையே போர் அறைகூவல் மற்றும் அச்சுறுத்தல்களை விடுத்துக் கொண்டன. மேலும் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது ஈராக் சிறியளவில் ஏவுகணைத் தாக்குதலையும் நிகழ்த்தியது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்தது.

இந்நிலையில் டெஹ்ரானில் சுலைமானி கொல்லப் பட்டதன் 40 ஆம் நாள் நினைவு சமீபத்தில் அனுட்டிக்கப் பட்டது. இதில் ஈரான் புரட்சிகரப் படையின் புதிய தளபதியான ஹொசைன் சலாமி உரையாற்றும் போதே அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் மேற் குறிப்பிட்டவாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்