உலகம்
Typography

அவுஸ்திரேலிய வரலாற்றில் மிக மோசமான இயற்கை அனர்த்தங்களில் ஒன்றாகப் பதிவான கடந்த செப்டம்பரில் ஆரம்பித்து தென்கிழக்கு அவுஸ்திரேலியாவைத் துவம்சம் செய்த காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளது.

முக்கியமாக நியூசவுத்வேல்ஸ் காட்டுத்தீ முற்றாகக் கட்டுக்குள் வந்து விட்டதாகத் தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக இப்பகுதிகளில் பெய்த கடும் மழையும் இதற்கு முக்கிய காரணமாகும். செப்டம்பரில் தொடங்கி சில மாதங்களாக நீடித்த இக்காட்டுத் தீ சுமார் ஒரு கோடி ஹெக்டேர் காட்டினை நாசமாக்கியது.

33 மனிதர்கள் உயிரிழந்தும், கோடிக் கணக்கான உயிரினங்கள் இறந்தும், 2500 இற்கும் அதிகமான வீடுகள் சிதைவடையவும் இந்தக் காட்டுத்தீ ஏதுவானது. அவுஸ்திரேலியாவின் முக்கிய நகரங்கள் மட்டுமன்றி கண்டம் தாண்டி வேறு சில நாடுகளிலும் காட்டுத்தீயால் ஏற்பட்ட புகை மண்டலம் பல நாட்களாக சூழ்ந்திருந்தது.

இக்காட்டுத்தீயின் வீரியத்தை அடக்க முடியாது தீயணைப்பு வீரர்கள் திண்டாடி வந்தனர். நாசாவின் கூற்றுப்படி இக்காட்டுத்தீ விளைவித்த புகை தென்னமெரிக்காவையும் சூழ்ந்து உலகின் பாதியளவுக்குப் பரந்து விட்டதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்