உலகம்
Typography

2008 ஆமாண்டு பல மனித உயிர்களைக் கொன்று குவித்த மும்பைத் தீவிரவாதத் தாக்குதலின் சூத்திர தாரியான லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீதுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 11 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.

தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்த குற்றச்சாட்டின் பேரில் தான் ஹபீஸ் சயீதுக்கு இச்சிறைத் தண்டனை அளிக்கப் பட்டுள்ளது.

மும்பைத் தாக்குதலின் பின் ஹபீஸ் சயீது மற்றும் அவனுடன் தொடர்புடைய ஜமாத் உத் தாவா என்ற பல்வேறு தீவிரவாத அமைப்புக்களையும் ஐ.நா ஏற்கனவே தீவிரவாத அமைப்புக்களாகப் பிரகடனப் படுத்தி தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கொடூர மும்பைத் தாக்குதலுக்கான ஆதாரங்களை இந்தியா பாகிஸ்தானுக்கு வழங்கிய போதும் இவன் பாகிஸ்தானில் சுதந்திரமாக செயலாற்றி வந்திருந்தான். இவன் மீது ஏற்கனவே 23 தீவிரவாத வழக்குகள் உள்ளன.

2017 இல் ஏற்கனவே ஹபீஸ் சயிது மற்றும் அவனின் 4 உறவினர்கள் தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப் பட்டனர். ஆனால் 11 மாதத்துக்குள் விடுவிக்கப் பட்டனர். இதையடுத்து அதிகரித்த சர்வதேசத்தின் அழுத்தத்தினால் பஞ்சாப் போலிசின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவினர் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து ஹபீஸ் சயீதைக் கைது செய்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்