உலகம்
Typography

உலக சுகாதாரத் தாபனத்தால் கொவிட் -19 என்று பெயர் சூட்டப் பட்டுள்ள கொரோனா வைரஸ் வரலாற்றில் பிளேக் நோய்க்கு இணையாகப் பரவி இதுவரை 1110 பேரை சீனாவில் மாத்திரம் பலி வாங்கியுள்ளது.

செவ்வாய்க்கிழமை மாத்திரம் 1500 பேர் புதிதாக இந்த வைரஸ் பரவியுள்ளதுடன், சீனாவுக்குள் மொத்தம் 44 815 பேருக்கு இந்த வைரஸ் தொற்றியிருப்பதாக அறிய வருகின்றது.

இதேவேளை சீனாவில் கொவிட்-19 வைரஸ் தாக்குதலை முதலில் தெரியப் படுத்திய இளம் பத்திரிகையாளர் ஒருவர் மாயமாகி உள்ளதாகவும் உறுதிப் படுத்தப் படாத தகவல் சில ஊடகங்களில் பரவியுள்ளது. இதைவிட கொவிட்-19 வைரஸால் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ள மத்திய சீனாவின் வுஹான் நகரில் பலி எண்ணிக்கை உண்மையில் பல ஆயிரம் எனவும் பாதிக்கப் பட்டவர்கள் தொகை ஒரு இலட்சத்துக்கும் அதிகம் என்றும் சில உறுதியற்ற செய்திகள் சில ஊடகங்களிலும், சமூக வலைத் தளங்களிலும் வெளியாகி வருகின்றது.

ஆனால் சமூக வலைத் தளங்களின் மூலம் சீனாவின் உண்மை நிலையை வெளிக் கொண்டு வருபவர்கள் உடனடியாக மாயமாகி வருவதால் இது குறித்துப் பேச பொது மக்கள் அச்சமடைந்தும் உள்ளனர். சமீப காலமாக செல்போன் வழியாக வுஹானின் அவல நிலையை சமூக வலைத் தளங்களில் வெளிப்படுத்தி வந்த சென் கியுஷி என்ற பத்திரிகையாளர், முதலில் சீன அரசால் எச்சரிக்கப் பட்டும், பின்னர் அவர் மாயமாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்