உலகம்
Typography

பங்களாதேஷில் இருந்து றோஹிங்கியா அகதிகளை ஏற்றிக் கொண்டு மலேசியா செல்ல முயன்ற மற்றுமொரு படகு விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த 16 றோஹிங்கியா அகதிகள் பலியாகி உள்ளனர்.

பங்களாதேஷின் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் மியான்மார் றோஹிங்கியா அகதிகளின் பல அகதி முகாம்கள் உள்ளன. இங்கு போதிய இடவசதியின்மை மற்றும் நெருக்கடி காரணமாக அங்கிருந்து தப்பி சட்டவிரோதமாக மோசமான படகுகளில் அவ்வப்போது பல அகதிகள் தப்பிச் செல்வது உண்டு.

சமீபத்தில் இது போன்று இரு சட்டவிரோத மீன்பிடிப் படகுகளில் 130 றோஹிங்கியா அகதிகள் மலேசியா நோக்கிப் புறப்பட்டுள்ளனர். இதில் ஒன்று வங்காள விரிகுடாவில் நடுக்கடலில் மூழ்கிய போது, உயிர்க் காப்பு கவசம் இல்லாத 16 பேர் தான் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். இவ்வாறு பலியானவர்களில் 14 பெண்களும், 1 குழந்தையும் அடங்குவதாகத் தெரிய வருகின்றது.

இப்படகில் பயணித்த 70 பேர் மீட்கப் பட்டதாகவும், மற்றைய கப்பலில் பயணித்தவர்கள் கதி என்னவென்று தெரியவில்ல என்றும் வங்கதேச அரசு அறிவித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்