உலகம்
Typography

தனது நாட்டில் சர்வதேசத்துக்கு அச்சுறுத்தலாக ஈரான் ஏவுகணைகளைத் தயாரிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி பொருளாதாரத் தடைகளையும் அதன் மீது அதிகரித்து வந்தது.

அண்மையில் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசும் அதன் பின் ஈரானும் தமக்கிடையே ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப் பட்ட அணுவாயுத பகிஷ்கரிப்பு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறின. மேலும் இரான் இராணுவத் தளபதியை அமெரிக்கா டிரோன் தாக்குதல் மூலம் கொலை செய்த நிகழ்வு மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்தது.

இந்நிலையில் மற்றைய வல்லரசு நாடுகளுக்கு இணையாக மறைமுகமாக விண்ணுக்கு செய்மதிகளை ஏவவும் ஈரான் முயன்று வந்தது. இதில் 4 ஆவது முறையாகச் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் ஈரான் தோல்வியைத் தழுவியுள்ளது. சிர்மோர்க் ரக ராக்கெட்டு மூலம் விண்ணில் செலுத்தப் பட்ட ஸாபர் என்ற செயற்கைக் கோள் தான் பூமியின் சுற்றுவட்டப் பாதையை அடைய முடியாது தோல்வியடைந்துள்ளது.

ஆனாலும் இந்த செய்மதியைச் சுமந்த ராக்கெட்டு வெற்றிகரமாக ஏவப்பட்டதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த வருடம் ஜனவரி, பெப்ரவரி மற்றும் ஆகஸ்ட்டில் ஈரானால் மேற்கொள்ளப் பட்ட இதுபோன்ற முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்