உலகம்
Typography

இன்று செவ்வாய்க்கிழமை மாத்திரம் 103 பேர் மரணித்து கொரோனாவால் சீனாவில் மரணித்தவர்கள் எண்ணிக்கை 1016 ஐக் கடந்துள்ளது.

மேலும் சீனாவில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் தொகை 50 000 ஐ நோக்கி விரைந்து வருகின்றது.

சீனாவைத் தவிர 25 உலக நாடுகளில் இதன் தாக்கம் கண்டறியப் பட்டுள்ள நிலையில் உலகளாவிய மிகக் கொடூரமான நோய் அச்சுறுத்தலாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை உலக சுகாதாரத் தாபனமான WHO அறிவித்துள்ளது. சீனாவின் சில நகரங்களில் மில்லியன் கணக்கான மக்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சீனாவில் இருந்து ஜப்பான் கடற்கரையை வந்த டயமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசுக் கப்பல் நடுக் கடலில் நிறுத்தப் பட்டு அதில் வந்த 3500 பேரில் 135 பேருக்கு கொரரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டும் உள்ளது. இக்கப்பலை ஜப்பான் அனுமதிக்க மறுத்துள்ள நிலையில் இதில் வந்த நூற்றுக் கணக்கான இந்தியர்களும் தம்மை எப்படியாவது காப்பாற்றுமாறு அவலக் குரல் எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் ஒரு வைரஸ் பரவும் போது அது தொடர்பான வதந்திகள் அதிகம் பரவினால் அதனைக் குணப்படுத்தும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிக சிரமம் ஏற்படுகின்றது என WHO இயக்குனர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்று கண்டறியப் பட்ட 716 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டதாகவும் சீனா அறிவித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்