உலகம்
Typography

உலக சுகாதார அமைப்பின் ஏற்பாட்டில், சர்வதேச மருத்துவ நிபுணர்கள் குழு ஒன்று சீனாவிற்குச் செல்லவுள்ளது. இதற்கான அனுமதியினைச் சீனா வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நெருக்கடிகள் மிகுந்த சுகாதார அவசரநிலை பிரகடன காலங்களில், சிறப்புடன் பணியாற்றிய அனுபவமிக்க, நிபுணர் புரூஸ் அய்ல்வார்டு தலைமையில் இந்தக் குழு சீனா விரைகிறது.

இது இவ்வாறிருக்க, கொரோனா வைரஸ் தாக்குதல் பரவும் விகிதம் தற்போது குறைந்திருப்பதாகவும், தொற்றுக்குள்ளாகும் நோயாளிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கி உள்ளதாகவும் சீன அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் 50 ஆயிரம் பேர் வரையில் வைரஸ் தாக்குதலில் பலியாகியிருக்கலாம். ஆனால் அதனைச் சீன அரசு மறைத்துவருகிறது என சீனாவின் கோடீஸ்வரர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர் அமெரிக்காவில் வசிப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், மக்கள் நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள சீன அரசு, வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்களை யாருக்கும் தெரியாமல் எரித்து வருகிறது எனவும், நாளொன்றுக்கு 1200 பேர் என்ற கணக்கில் இதுவரை 50 ஆயிரம் பேர் வரை இவ்வாறு எரிக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

சுமார் மூன்றரைக் கோடிக்கும் அதிகமான மக்கள் வாழக் கூடிய யுகான் நகரில், பல லட்சம் பேரை மாயமாகியுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளமை கோடீஸ்வரர் சொல்வது உண்மையா? என ஐயங்கொள்ள வைப்பதாகவும், கூறப்படுகிறது.

இதேவேளை இந்தக் கொடிய வைரஸின் தாக்கத்தில், நண்பர்கள் பாதிக்கப்படுவதைப் பார்க்க முடியவில்லை. ஆதலால் அதனை அழிக்கும் மருந்தினைக் கண்டுபிடிக்கும் தனிமனிதருக்கோ அல்லது அமைப்புக்கோ ஒரு மில்லியன் டாலர் பரிசளிக்கவுள்ளதாக பிரபல ஹாலிவூட் நடிகர் ஜாக்கிசான் சமூகவலைத்தளத்தின் மூலம் அறிவிப்புச் செய்துள்ளதாகவும் அறியவருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்