உலகம்
Typography

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தொற்றினால் இதுவரை சீனாவில் மட்டும் 900 க்கும் அதிகமானோர் பலியாகியள்ளதாகத் தெரியவருகிறது.

இது கடந்த 2002 மற்றும் 2003ம் ஆண்டுகளில் ஏற்பட்ட சார்ஸ் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் தொகையினை விட அதிகம் எனவும் அறியப்படுகிறது. முலும் இந்த வைரஜ் தொற்றுக்கு ஆளானோர் தொகை 40 ஆயிரத்தை நெருக்கியுள்ளதாகவும் கவலை தெரிவிக்கப்படுகிறது.

சார்ஸ் வைரஸ் தொற்றினால் அப்போது 774 பேர் பலியாகி இருந்ததாகவும் தற்போது கோரோனோ வைரஸ் தாக்குதல் பலியானோர் தொகை வேகமாக அதிகரித்து வருவதாகவும் அவதானிகள் வருத்தம் தெரிவித்துள்ளார்கள். இதேவேளை இந்த வைரஸ் தொற்றிலிருந்து பலர் வெற்றிகரமாக மீட்கப்பட்டுன்னார்கள் என சீன மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்