உலகம்
Typography

அண்டார்ட்டிக்காவில் வரலாற்றில் மிக அதிகபட்ச 2 ஆவது வெப்பநிலையாக அண்மையில் 18.3 செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு 2015 மார் மாதம் பதிவான 17.5 செல்சியஸ் தான் அதிகளவு வெப்பநிலையாக இருந்தது.

அண்டார்ட்டிக்கா கண்டத்தின் வடக்கு முனையில் இருக்கும் உலகில் அதிக விகிதத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் பகுதி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐ.நா சபையின் உலக வானிலை ஆய்வு நிறுவனத்தால் இத்தகவல் வெளியிடப் பட்டுள்ளது. சாதாரணமாக வெயில் காலத்தில் கூட அண்டார்ட்டிக்காவில் இந்தளவு வெப்பம் பதிவாகாது என்றும் இந்த வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் அண்டார்ட்டிக்காவில் 3 டிகிரி வெப்பம் அதிகமாகியுள்ளதுடன் மேற்குக் கடற்கரையில் இருக்கும் 87% வீதப் பனிப்பாறைகள் இதுவரை உருகியிருப்பதாகவும் கணிப்புக் கூறுகின்றது.

கடந்த 12 ஆண்டுகளில் அண்டார்ட்டிக்காவில் பனிப்பாறைகள் உருகுவது அதிகமாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தென் துருவத்தில் புவி வெப்பமாகி அதிகளவு பனிப்பாறைகள் உருகுவது பூமியில் ஒரு நூற்றாண்டுக்கு 10 அடி கடல் மட்டத்தை உயர்த்தக் கூடியது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 1979 இலிருந்து 2017 வரை அண்டார்ட்டிக்காவில் பனிப் படுக்கைகளில் பனி உருகுவது 6 மடங்கு அதிகரித்துள்ளது. இது உண்மையில் மிக மோசமான ஒரு பிரச்சினையாகும்.

கடல் மட்டம் உயர்ந்தால் சிறிய சிறிய தீவுகள் அனைத்தும் கடலில் மூழ்கும் அபாயமும் உலகில் கடற்கரைக்கு அருகே இருக்கும் மிகப் பெரும் நகரங்கள் கடலால் உள் வாங்கப் படவும் அபாயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்