உலகம்
Typography

உலகின் வர்த்தக முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படும் அமெரிக்க சீன வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்தனதாகத் தெரிய வருகிறது.

மீக நீண்ட காலமாக, இந்த இரு நாடுகளுக்கும் இடையில், இழுபறியில் இருந்து வந்த வர்த்தகச் செயற்பாடுகளில், ஒழுங்கு நிலை ஏற்படுத்தும், முதற்கட்ட உடன்பாட்டில், இரு நாடுகளும் கைச்சாத்திட்டுள்ளன. ஆண்டுகளாக வர்த்தக போர் நடந்து வந்தது. இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

அமெரிக்க சீனா அரச, மற்றும் வர்த்தக உயர்மட்ட பிரதிநிதிகள் முன்னிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பும், சீன துணை பிரதமர் லீயு ஹியும், கையெழுத்திட்டுக் கொண்டதன் பேரில் இந்த வர்த்தக விவகாரம் சுமுக நிலைக்கு வரும் சாத்தியங்கள் உருவாகியுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS