உலகம்
Typography

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நாளை புதன்கிழமை முக்கிய வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்தாகவுள்ளது.

பலகட்ட பேச்சுவார்த்தயை அடுத்து வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன துணைப் பிரதமர் லியுஹி முன்னிலையில் இந்த முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்தாகவுள்ளது.

சீனா இதன் மூலம் வருங்காலத்தில் அமெரிக்காவிடம் இருந்து கார் உதிரிப் பாகங்கள், விமானம், வேளாண்மை இயந்திரங்கள் அடங்கலாக 8000 கோடி பெறுமதியான பொருட்களைக் கொள்வனவு செய்யவுள்ளது. இதுதவிர 5000 கோடி டாலர் பெறுமதி கொண்ட கச்சா எண்ணெய், எரிசக்தித் துறை சார்ந்த பொருட்கள் மற்றும் 3500 கோடி டாலர் பெறுமதியான சேவை போன்றவற்றை இன்னும் 2 ஆண்டுகளுக்குள் வாங்கவும் சீனா முடிவெடுத்துள்ளது.

அமெரிக்காவிடம் இருந்து விமானங்களை வாங்க சீனா எடுத்திருக்கும் முடிவு உலகின் முன்னணி விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங் இற்கு இன்னும் அதிக இலாபத்தை ஈட்டக் கூடியதாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS