உலகம்
Typography

உலக அளவில் தெற்கு அவுஸ்திரேலியாவில் தான் அதிகளவாக 10 இலட்சத்துக்கும் அதிகமான ஒட்டகங்கள் வாழ்ந்து வருகின்றன.

சமீப வருடங்களாக வறட்சி, கடும் வெப்பம் மற்றும் தீவிரமான காட்டுத்தீ போன்ற வரலாறு காணாத பிரச்சினைகளை அவுஸ்திரேலியா சந்தித்து வருகின்றது.

கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட தீவிர காட்டுத்தீக்கு 50 கோடி உயிரினங்கள் பலியாகி இருக்கலாம் என்று தெரிவிக்கப் படும் வேளையில் தற்போது அங்கு கடும் தண்ணீர்ப் பஞ்சமும் நிலவுகின்றது. பொதுமக்களுக்குத் தேவையான தண்ணீரை ஒட்டகங்கள் குடித்துத் தீர்த்து விடுவதால் முதற்கட்டமாக 10 000 ஒட்டகங்களை சுட்டுக் கொல்ல அவுஸ்திரேலிய அரசு முடிவெடுத்ததுடன் 5000 ஒட்டகங்களை ஏற்கனவே சுட்டுக் கொன்றுள்ளது.

அதாவது கடும் வறட்சி காரணமாக இந்த ஒட்டகங்கள் குடியிருப்புக்கள் மற்றும் நகரங்கள், சாலைகளில் குவிந்து தண்ணீரை உறிஞ்சி வருவதாகக் கூறப்படுகின்றது. அரசின் இந்த ஒட்டகங்களைக் கொல்லும் உத்தரவுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS