உலகம்
Typography

பிரித்தானிய அரச குடும்பத்துக்கான மரபுகள் இன்றளவும், பிரித்தானியர்களால் மதிக்கப்படுபவை. பராளுமன்ற ஆட்சி தொடர்கின்ற போதிலும், முடிக்குரிய அரச குடும்பப் பாரம்பரியங்கள், பல்வேறு விமர்சனங்கள் தாண்டி இன்னமம் தொடர்கின்றன.

மதிப்பிற்குரிய அரச குடும்பத்தின் கடப்பாடுகளிலும், பொறுப்புகளிலுமிருந்து, விலகி வாழ்வது அக் குடும்ப உறுப்பினர்களுக்குச் சாத்தியமில்லை. முடிக்குரிய வாரிசுகளில் ஒருவராகக் கருதப்படும், இ‌ளவரசர் ஹாரி - மேகன் தம்பதிகள், அரச பாரம்பரியங்களைத் துறந்து, சாதாரண வாழ்வொன்றினை வாழ்வதற்குத் தெரிவித்த விருப்பத்திற்கு, பிரித்தானியாவின் மகாராணி எலிசபெத் அனுமதி அளித்துள்ளார்.

விபத்தில் மறைந்த பிரிட்டன் இளவரசி டயானா சார்ள்ஸ் தம்பதிகளின் இரண்டாவது மகன் ஹாரி யே இவ்வாறு முடிக்குரிய அரச வாழ்வினைத் துறந்து செல்கின்றார். 2018ல் அமெரிக்க நடிகையான மேகனை திருமணம் செய்து கொண்ட ஹாரி, அரசு குடும்ப நிகழ்வுகளில் ஒதுங்கியே இருந்து வந்தார்கள்.

அன்மையில், பிரித்தானிய அரசு குடும்ப வழமைகளையிலுருந்து விலகி வாழ்வும், தங்கள் தேவைக்காக பணிக்கு செல்ல உள்ளதாகவும், இத் தம்பதிகள் அறிவித்ததுடன், மகாராணியிடமும் தங்கள் விரப்பத்தினைத் தெரிவிததனர். இது தொடர்பில் அரச குடும்ப உறவினர்களுடன் ஆலோசனை நடத்திய மகாராணி, அவர்களது தனித்துவ வாழ்வு காலத்தின் மாற்றம் எனத் தெரிவித்து அனுமதி அளித்துள்ளார்.

அவரது இந்த அனுமதியும், முடிவும், அறிக்கையாகவும், பிரித்தானிய அரச குடும்பத்தின் வெளியிடப்பெற்றுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS