உலகம்
Typography

தேசத் துரோக குற்றச்சாட்டின் கீழ் பாகிஸ்தான் முன்னால் அதிபர் முஷராபுக்கு பெஷாவர் நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை லாகூர் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

முஷாரப் அதிபராக இருந்த 2001 முதல் 2008 வரையிலான காலப் பகுதியில் அவர் அவசர நிலையைப் பிரகடனப் படுத்தி அரசியல் எதிரிகளைப் பழி வாங்கி நாட்டுக்கு எதிராக சதி செய்து பல நீதிபதிகளைப் பதவி இறக்கிய காரணங்களுக்காகவே அவர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப் பட்டது.

இவருக்குத் தூக்குத் தண்டனை விதித்த பெஷாவர் நீதிமன்றம் தண்டனைக்கு முன் முஷாரப் இறந்தால் அவரது உடலை 3 நாள் தூக்கில் தொங்க விட வேண்டும் என்றும் அதிரடியாக அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது முஷாரபுக்கு அளிக்கப் பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்துள்ள லாகூர் உயர் நீதிமன்றம், முஷராப் மீதான வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைத்தது அரசியலமைப்புக்கு விரோதமானது என்றும் தீர்ப்பில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS