உலகம்
Typography

தைவானில் சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஏற்கனவே பதவியில் இருக்கும் அதிபர் சாய் இங் வென் மீண்டும் அபார வெற்றியை ஈட்டியுள்ளார்.

தைவானில் அதிபர், துணை அதிபர் மற்றும் 113 நாடாளுமனற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சனிக்கிழமை இடம்பெற்றது. இதில் அதிபர் சாய் இங் வென் தான் மீண்டும் வெற்றி பெறுவார் என்றே கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்திருந்தன. தற்போது அது ஊர்ஜிதமாகியுள்ளது.

கிட்டத்தட்ட 57% வீத முன்னணி வாக்குகளால் சாய் இங் வென் வெற்றி பெற்றுள்ளார். சீனாவின் மேலாதிக்கத்தால் அதிகம் பாதிக்கப் பட்டு வரும் தைவானில் சீனாவுக்கு எதிரான கடுமையான நிலைப்பட்டைக் கொண்ட சாய் இங் வென் இனை மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர். இதன் மூலம் சீனாவுக்குத் தமது அரசியல் அபிலாஷைகள் மற்றும் உரிமைகள் குறித்து தக்க பதிலடியை தைவான் மக்கள் தெரிவித்துள்ளதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

அண்மைக் காலமாக தைவானை உலக அரங்கில் இருந்து தனிமைப் படுத்த சீனா மேற்கொண்டு வரும் முயற்சி காரணமாக, சீனாவின் வற்புறுத்தலின் பேரில் சில உலக நாடுகள் தைவானுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS