உலகம்
Typography

உலகில் மிக ஆபத்தான எரிமலைகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலா அருகேயுள்ள டால் எரிமலை மீண்டும் சீற்றமடையத் தொடங்கியுள்ளது.

இதனால் சுமார் 8000 பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப் பட்டுள்ளனர். மனிலாவுக்குத் தெற்கே 31 மைல் தொலைவில் ஒரு ஏரிக்கு நடுவே இந்த எரிமலை அமைந்துள்ளது. கடந்த காலங்களில் இதன் சீற்றத்தால் இதுவரை 6000 பேர் பலியாகி உள்ளனர்.

ஆனாலும் டிராக்கிங் செய்யும் ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகளின் பிரசித்த இடமாகவே இது திகழ்ந்து வருகின்றது. தற்போது இந்த எரிமலை சுமார் 1 கிலோ மீட்டர் உயரந்துக்குக் கரும் சாம்பல் புகையையும், லாவா இனையும் கக்கி வருகின்றது. பிலிப்பைன்ஸ் எரிமலை அவதான நிலையம் வெளியிட்ட கருத்தில் இன்னும் சில மணி நேரங்களில் இந்த டால் எரிமலைப் பகுதியில் அபாயகரமான வெடிப்பும், நில அதிர்வும் ஏற்படலாம் எனத் தெரிவித்துள்ளது.

தற்போது மனிலா விமான ஓடு தளம் மூடப் பட்டு கிட்டத் தட்ட 170 விமானங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன. நாளைய தினமும் விமான நிலையத்துக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. ஆண்டு தோறும் கிட்டத்தட்ட 20 சூறாவளிகளாலும், பல எரிமலை சீற்றங்களாலும் பாதிக்கப் பட்டு வரும் பிலிப்பைன்ஸ் நாடு பசுபிக் சமுத்திரத்தின் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளது. பிலிப்பைன்ஸில் அமைந்துள்ள 24 பெரிய எரிமலைகளில் 2 ஆவது பெரிய எரிமலை டால் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS