உலகம்
Typography

ஈரான் தலைநகரிலிருந்து, உக்ரைன் தலைநகரக்கு பயணம் மேற்கொண்ட போயிங் ரக விமானம் ஒன்று, புறப்பட்ட சில மணிநேரத்திலேயே விபத்துக்குள்ளானது.

இந்த விமானத்தின் விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைகளின் போது இயந்திரக் கோளாறு என முதலில் தெரிவிக்கப்பட்டது. இதனை அமெரிக்காவும் வேறு சில நாடுகளும் மறுத்தன.

இந்நிலையில் விமானம் தவறுதலாகச் சுடப்பட்டதெனவும், மனிதத் தவறினால் ஏற்பட்ட அத் தவறுக்கான பொறுப்பினை தாம் ஏற்றுக்கொள்வதாகவும், அதில் உயிரிழந்த 176 பேருடைய இழப்பின் துயரினைப் பகிர்ந்து, தாமும் வருந்துவதாகவும் ஈரானிய அரச தலைவர் ரவுகாணி தெரிவித்தார்.

போர் பதற்றம் நிறைந்த சூழ்நிலையில், இந்த மனிதத் தவறு நிகழ்ந்து விட்டதாகவும், இது ஒரு மன்னிக்க முடியாத தவறு எனவும், இது தொடர்பிலான விசாரணைகள் நடந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS