உலகம்
Typography

கடந்த 2016 ஆமாண்டு அமெரிக்க ஹாலிவுட் நடிகர், சமூக சேவகி மற்றும் பெண்ணிய வாதியான மேகன் மார்க்கலை சந்தித்து காதலிக்கத் தொடங்கிய பிரிட்டன் இளம் இளவரசர் ஹரி 2017 இல் தன் காதலை அறிவித்து அவரைத் திருமணமும் செய்து கொண்டார்.

இதற்கு பிரிட்டன் அரச குடும்பம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது. திருமணத்தின் பின் இவர்கள் இருவரும் தனியாக வீடு எடுத்து அதில் வசித்து வந்தனர். இக்கால கட்டத்தில் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்று கூடல்களிலும் இராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் இவர்கள் பலமுறை அவமானப் படுத்தப் பட்டனர்.

தொலைக்காட்சிப் பேட்டிகளிலும் கூட மேகனைக் குறித்து தவறாகப் பேசப்பட்டன. வெள்ளை இனத்தைச் சேர்ந்திராத மேகன் ஹரிக்கு முன்பே ஒருவரைத் திருமணம் செய்து விவாகரத்துப் பெற்றவர் என்பதும் இதற்கு ஒரு காரணமாகும்.
மேகன் கர்ப்பம் தரித்திருந்த வேளையில் ஊடகங்களின் அழுத்தத்தால் மேகன் மற்றும் ஹரி இருவருமே மன உளைச்சலுக்கு ஆளானார்கள். இதையடுத்து ஊடகங்களை கடுமையாகப் பேசி தம்மைத் தனியே இருக்க விடுமாறு இன்ஸ்டாகிராமில் ஹரி பதிவை வெளியிட்டார்.

இந்நிலையில் தற்போது பிரிட்டன் அரச குடும்பத்தின் பொறுப்புக்களைத் துறப்பதாகவும், பரம்பரை சொத்து வேண்டாம் என்றும் பிரிட்டன் அரசி அழைத்தால் உதவிக்குப் போவோம் என்றும் ஹரியும் மேகனும் இணைந்து அறிவித்துள்ளனர்.

மேலும் இவர்கள் வட அமெரிக்கா சென்று சொந்தமாக உழைத்து வாழவிருப்பதாகவும் தெரிய வருகின்றது. இளவரசர் ஹரியை உண்மையாக நேசிக்கும் பிரிட்டன் மக்கள் அவரது இந்த முடிவை வரவேற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்