உலகம்
Typography

சமீபத்தில் போயிங் 737-800 ரக விமனம் டெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சற்று நேரத்தில் ஏற்பட்ட கோளாறினால் விமான நிலையத்துக்குத் திரும்பிச் செல்கையில் தீப்பிடித்து தரையில் வேகமாக மோதி முற்றிலும் சிதைவடைந்து விபத்துக்குள்ளானது.

இதில் அதில் பயணித்த 176 பயணிகளும் உயிரிழந்தனர்.

தற்போது ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர்ப் பதற்றம் இருப்பதால் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டியை அதன் உரிமையாளரான போயிங் நிறுவனத்துக்கோ அல்லது அமெரிக்காவுக்கோ கையளிக்க மாட்டோம் என ஈரான் விமானப் போக்குவரத்து அமைப்புத் தலைவர் அலி அபெட்ஸாதே தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச விதிகளின் படி விசாரணையை மேற்கொள்ள ஈரானுக்கும் உரிமை இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விமானம் புறப்பட முன்னர் எந்த வகையான கோளாறுகளையும் கொண்டிருந்ததாக அமெரிக்க, ஐரோப்பிய விமானப் பயணக் கண்காணிப்பு அதிகாரிகள் எவரும் இதுவரை தகவல் தெரிவிக்கவில்லை. உலகில் தற்போது ஆயிரக் கணக்கான போயிங் 737-800 ரக விமானங்கள் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை பலகோடி விமானப் பயணங்களை வெற்றிகரமாக இவை முடித்துள்ளதாகவும், இந்த வகை விமானங்களில், இந்த விபத்து 10 ஆவது சம்பவம் என்றும் விமானப் பயணப் பாதுகாப்பு நிபுணர் டாட் கர்டிஸ் பிபிசிக்குத் தெரிவித்துள்ளார்.

இந்த விமான விபத்தில் 82 ஈரானியர்கள், 63 கனேடியர்கள், 9 விமான ஊழியர்கள் உட்பட 11 உக்ரைனியர்கள், 10 சுவீடன் நாட்டவர்கள், 4 ஆப்கானியர்கள், 3 பிரித்தானியர்கள் மற்றும் 3 ஜேர்மனியர்களும் உயிர் துறந்ததாகத் தெரிய வருகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்